இந்த வலைப்பூவில் அவ்வப்போது தோன்றும் எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கவிதைகளுக்கெனத் தனியே இன்னொரு வலைப்பூ இருப்பதால் இதில் பெரும்பாலும் கட்டுரைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம். நான் பகிரவிருக்கும் கருத்துகள் எனது வாசிப்பு மற்றும் வாழ்பனுபவங்களின் அடிப்படையில் இருந்தாலும் அவை எனது சொந்த கருத்துகளாகவே பெரும்பாலும் இருக்கும். அதனால், தவறானதாகவோ, யாருடைய மனத்தையும் புண்படுத்துவதாகவோ இருப்பது சுட்டிக்காட்டப்பட்டால் அது ஏற்புக்குரியதாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்யப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.